My Experiences

This place is my own little paradise where i contemplate my thoughts and spill out my experiences.

Wednesday, January 14, 2015

நினைவுகளின் அடுக்கில் இருந்து - பொங்கல்

இப்ப மாதிரி டீ.வி முன்னாடி கொண்டாடுற பொங்கல் இல்லை அது. எலும்பைக் குடையுற மார்கழி குளிர்ல ராத்திரி 2.00 மணிக்கு தாதன் ஊதுற பாங்க்கா சத்தத்துக்கு "டே, எந்திரிச்சு சாமி கும்புட்டுக்கோ" என பாட்டி எழுப்பும் போதே பொங்கலுக்கான அடையாளங்கள் தென்பட ஆரம்பிக்கும். கொல்லை காட்ல அறுப்பு முடிஞ்சு ஊர் பொம்பளைங்க எல்லாம் பொத்தல் விழுந்த செவத்துக்கு மண் அப்பி சுண்ணாம்பு பூசுறதும், வயசுப்பிள்ளைங்க சாணி தெளிச்சு வீதியை அடைக்கிற மாரி பெரிய கோலமா போட்டு நடுவுல சாணிப் புள்ளையார் வைச்சு தலைல பூசணிப் பூ வைக்கிறதும் பாதி சொல்லுச்சின்னா மீதியை கழுவி விட்ட மாதிரி இருக்கிற ஊரும், வீட்டு எரவாணத்துல தொங்குற காப்பும், மாட்டு கழுத்து சலங்கையும், கலரடிச்ச கொம்பும்  "பொங்கல் வந்தே வந்துடுச்சு டோய்...!"-ன்னு கன்ஃபார்மா காட்டிடும்.

மார்கழி கடைசி நாள் காப்புக் கட்டு. பொம்பளைங்க வீடு சுத்தம் பண்றதுக்குள்ள, அரை டிக்கெட்டுங்க நாங்க காப்புக் கட்ட பூலாப் பூ, மாவிலை, ஊணாங் கொடி, பண்ணைப் பூ, வேப்ப இலை தேடி காடு மேடெல்லாம் சுத்துவோம். மீதி எல்லாம் கிடைச்சாலும் இந்த பூலாப்பூ மட்டும் காட்டுக்கு போனாத்தான் கிடைக்கும்.  பூலாப்பூ தேடி காட்டுக்கு போய் அதை மறந்து குதியாட்டம் போட்டுட்டு வெறுங்கையோட வீட்டுக்கு வந்து மாத்து வாங்குறதும் நடக்கும். அவனவனுக்கு பிரியமான கன்னுக்குட்டியையோ, ஆட்டையோ குளிப்பாட்டி, பப்பாளி இலை தண்டை சாயப்பொடில நனைச்சு உடம்பு முழுக்க குத்தி சும்மா புள்ளிமான் கணக்கா மாத்தி வைப்போம். "மாட்டுக்கும், ஆட்டுக்கும் மட்டும்தான் அலங்காரமா?"-ன்னு ஏக்கமா பாக்குற நாய்க்கும் சில நேரம் புள்ளி குத்திடுவோம்.

தை மொத நாள் பெரும் பொங்கல். ஊர்ல நிறைய நிலம் வச்சிருக்கவங்கதான் பெரும்பாலும் வீட்டுப் பொங்கல் பெருசா வைப்பாங்க. பெரும் பொங்கலுக்கு அடுப்புக் குழி வீட்டு வாசல்லதான் வெட்டுவாங்க. போன வருசக் குழியை மூடும் போது போட்ட 10 காசோ, நாலணாவோ யார் கைல கிடைக்கும்?-ன்ற போட்டில குழி நோண்டுற மண்ணை கோழி மாதிரி சீய்ச்சுத் தள்ளிடுவாங்க பசங்க. கால் ஏக்கர், அரை ஏக்கர் வைச்சிருக்கிறவன், அதுவும் இல்லாதவங்க வீட்டுல உள்ளடுப்புலயே பொங்கல் பொங்கிரும்.

ஆனா ரெண்டாம் நாள் செய்யுற பட்டிப் பொங்கல் அப்படியில்லை. வீட்ல ஒத்தை பால் மாடு இருக்கிறவன் கூட இரண்டு, மூனு வீட்டுக்காரங்களோட சேர்ந்து பட்டிப் பொங்கல் விடுவாங்க. மாடோ, ஆடோ, இல்லை எருமையோ எதுவானாலும் அன்னைக்கு தோரண வாசல்-ல நுழைஞ்சு வந்தாகனும். இல்லாட்டி வர்ர வருசம் செழிப்பா இருக்காது-ன்னு ஒரு நம்பிக்கை. வடக்கு தெற்கா கம்பம் நட்டு, அதுல 2 கரும்பு, மஞ்சள் செடி கட்டி, கிழக்கு பார்த்த மாதிரி வைக்கபுல்லு பிரியில் மாவிலை தோரணம் கட்டி இருக்கும். தரையை சுத்தம் பண்ணி பரப்புன வாழை இலை மேல பொங்கச் சோறு, பூசணிச் சாறு, தயிர், நெய், வெல்லம் போட்டு தளுவி. "பொங்கலோ பொங்கல், பொலியோ பொலி"-ன்னு  சுத்தி வந்து சூரியனுக்கு பூஜை. முடிஞ்சதும் தளுவி சோத்தை பிசைஞ்சு புடிச்ச உண்டை. உண்டைன்னா திருப்பதி லட்டு மாதிரி ஒரு கைல புடிக்கிற அளவில்லை, சும்மா போச்சம்பள்ளி வெல்லம் மாதிரி இரண்டு கைல புடிச்சாலும் கொள்ளாது! மாட்டுக்கு ஊட்டுன கையோட நமக்கும் ஒரு உருண்டை.  அப்புறம் மாடுங்களை தோரண வாசல் வழியா விரட்டி விட்டோம்-ன்னா அதுங்க சாயங்காலம் தண்ணி குடிக்கத்தான் வீட்டுக்கு வரும். அழிகொல்லைக் காலம்ங்கறதால யார்வீட்டு கொல்லைலயாவது மேஞ்சிடும்-ன்ற பயம் இல்லை.

மூனாம் நாள் எருது கட்டுக்கு டுர்ரி காட்ட துணி கட்டுற கோலும், ஓட்டை சட்டி கவுக்க சோள மோட்டும் பல நாளுக்கு முன்னாடியே சேக்க ஆரம்பிச்சிருப்போம். காத்தால ஆடறுக்க தாத்தா கூட போனா, ஆட்டு தலை சுடுறப்ப காதை உருவி சுடச் சுட வாய்ல போடுவார். சுட்ட ஆட்டு மண்டையை உடைச்சு ஆட்டு மூளையை சூடு ஆறுறதுக்கு முன்னாடியே உள்ளங்கைல போட்டு பல்லு படாம ஒரே உரிஞ்சு! அப்படியே ஒரு ரவுன்டு அடிச்சிட்டு வீட்டுக்கு வந்தா இரத்தப் பொரியலோட சுடச்சுட இட்லி இல்லாட்டி தோசை. அதை தின்னுட்டு அங்க இங்க ஆடிட்டு வந்தா  மத்தியான சோத்துக்கு கறி சாறும், சோறும் வா, வா-ன்னு கூப்பிடும். சாயங்காலம் மந்தை வீதிக்கு போனா மாடோட்டத்தை பாக்க ஊரே கூடி நிக்கும்.

எருது கட்டுக்கு நல்ல பாய்ச்சல் இருக்குற எருதா 3 எருது புடிப்பாங்க. கழுத்து கவுத்துல வடக்கயிறு போட்டு முன்னால 5ஆளு, பின்னால 5 ஆளுன்னு புடிப்பாங்க. ஒரு பக்கம் இருக்குறவங்களை முட்டப் பாயும்போது மறுபக்கம் இருக்குறவங்க இழுத்து புடிக்கனும். கோல்ல துணியை கட்டி டுர்ரி காட்டுனா காட்டுற ஆளை பாயுறதுக்கு எருது சும்மா துள்ளிட்டு வரும். வந்த வாக்குல முன்னாடி சோள மோட்டுல கவுத்து வைச்சிருக்கிற சட்டியை தூக்கி ஒரே வீசு! சட்டி 10 அடி மேல் பறக்கும். புள்ளா(ர்) சாமி இருக்க உச்சி மரத்தை 3 சுத்து சுத்தி வந்தா எருதை அவுத்து விட்டுடுவாங்க.  அப்புறம் அடுத்த எருது, இதே மாதிரி 3 சுத்து.

சாயங்காலம் சின்ன பசங்க, புள்ளைங்களுக்கு ஓட்டப் பந்தயம், மியூசிக்கல் சேர் போன்றவையும், வயசுப் பொண்ணுங்களுக்கு ஊசி நூல் கோக்குறது, எலுமிச்சை ஸ்பூன் ஓட்டம் மற்றும் வயசுப் பசங்களுக்கு ஸ்லோ சைக்கிள், கோணி சாக்கு ஓட்டம் போன்ற போட்டிகளும் நடக்கும். எல்லாம் அமைஞ்சு வர்ர வருசத்துல கபடி போட்டியும் நடக்குறது ( தவறாம சண்டையும்) உண்டு.இது எல்லாம் முடிஞ்சு வீட்டுக்கு வரப்ப ராத்திரி 10 மணி ஆகிடும்.

அடுத்த நாள் பள்ளிக்கூடத்துக்கு போனா,  யாராச்சும் ஒருத்தன் பைக்குள்ள விரல் தடிமனுக்கு இருக்கிற தோசையை கையெல்லாம் எண்ணையாகுற மாதிரி பிட்டு கமுக்கமா வாயில் போட்டுப்பான். கடலை எண்ணைல சுட்ட தோசை வாசனை வகுப்பெல்லாம் பரவும். வாத்தியார்"டே! நேத்து யார் வூட்ல என்னா பலகாரம்?"- ன்னு கேப்பார். தோசை, இட்லின்னு சொல்றவங்க ஏகப்பட்டவங்க. நெல்லுச் சோறு-ன்னு சொன்னவனும் உண்டு. "யார் வீட்டு மாடு எப்படி ஓடுச்சு? யார் மாட்டு கொம்புல பலகறை கட்டியிருந்தாங்க?"-ன்றது போன்ற அதி முக்கியமான விசயங்களெல்லாம் சில பல வாரங்களுக்கு அலசப்படும்.

காஞ்ச துவரஞ் செடி வாசமும், புங்கை இலை சருகும் அடுத்து வர்ர வெய்யில் காலத்துக்கு அச்சாரம். அதுக்கு முன்னாடி வர்ர முழுப் பரிச்சைக்கும் தான். :-)

அப்படியெல்லாம் கொண்டாடி மனசுல மறையாம இருக்க பொங்கல் இந்த வருசமும் கேஸ் அடுப்புல எவர் சில்வர் பாத்திரத்துல பொங்கி, போன்ல "ஹேப்பி பொங்கல்" சொல்லி, டீவில "இந்தியத் தொலைக்காட்சி களில் முதன் முறையாக..."அப்படின்னு முடிஞ்சிடும்.

Labels: , , , ,

Sunday, September 08, 2013

வருத்தப்படாத வாலிபர் சங்கம்


நேற்று 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படம் பார்த்தேன். இடையில் கொஞ்சம் சவ்வாக இழுத்ததென்றாலும் பல இடங்களில் வாய்விட்டு சிரிக்க முடிந்தது. நான் சொல்ல வந்தது அதைப் பற்றியல்ல, படம் சொல்லாமல் விட்டதை பற்றியே நான் பேசவந்தது. 

 M.Sc, M.Phill முடித்தும் வேலை இல்லாமல் கிராமத்தில் பெண்களுக்கு நூல் விடுவதையே வாடிக்கையாகக் கொண்டவன் கல்யாணமாகியும் மாமனார் காசில் பிளக்ஸ் பேனர் வைத்துக் கொண்டு, ஒரு விட்டேத்தியான மனப்பாங்குடன் இருப்பதுதான் இன்றைய சமூகத்தின் நிலையென்றால் என்ன சொல்வதென்று தெரியவில்லை. 

பொதுவாக படங்களில் வரும் மிகை உணர்ச்சிக்காகவும், யதார்த்ததிற்கொப்பாத ஒரே பாட்டில் பெரிய ஆளாகிவிடுவதாக காட்டுவதற்காகவும் கேலி செய்யப்படுபர் விக்கிரமன். ஆனாலும் 'நல்லவன் இறுதியில் வெல்வான், விடாமுயற்சி ஒருவனை உச்சத்திற்கு கொண்டு செல்லும்' என்பது போன்ற அவர் பட கருத்துகள் கீழ்நிலையில் உள்ள ஒருவனுக்கு முன்னேற உத்வேகத்தையும், நம்பிக்கையையும் அளித்தன/அளிக்கும் என்பதை மறுக்க இயலாது.

அந்த கண்ணோட்டத்தில் 'வ.ப.வா.ச', 'சூது கௌவ்வும்' போன்ற படங்களை பார்த்து இவர்கள் சமூகத்திற்கு என்ன சொல்ல வருகின்றார்கள் என எண்ணும்போது அயர்சியே மேலிடுகிறது.

எனக்கெல்லாம் இராத்திரி தூங்கும்போது 
என் தாத்தா பாட்டி கதை சொல்லி தூங்க வைப்பர். தெரிந்தோ தெரியாமலோ கதையில் பொதிந்துள்ள நீதி மனதிலும் பதிந்து வாழ்கையில் வழி நடத்துகிறது. இப்போதோ தாத்தாவும், பாட்டியும் இருந்த இடத்தை டீ.வி-யும், சினிமாவும் எடுத்துக் கொண்டன. இவற்றில் வரும் நாடகங்களும், திரைப்படங்களும் சொல்லித்தரும் நீதி இதுதானென்றால் இதைபார்த்து வளரும் சந்ததி எப்படி இருக்கும்?

அது சரி, எந்த வழியிலாவது சம்பாதிப்பவன் சாமர்த்தியசாலியாகவும், லஞ்சம் வாங்காதவன் பிழைக்கத் தெரியாதவனாகவும் பார்க்கப்படும் சமூகத்தில் இத்தகைய கருத்துகளை இக்கால திரைப்படங்களில் எதிர்பார்ப்பதும் முட்டாள்தனம் தானே?

Friday, August 23, 2013

மெட்டலர்ஜி



அஞ்சாவது செமஸ்டர்-ன்னு நினைக்கிறேன். மெட்டலர்ஜி, மெட்டலர்ஜி-ன்னு ஒரு சப்ஜெக்ட்டு, அயர்ன்-கார்பன் டயக்கிராம், ஆஸ்டினைட், மார்ட்டன்சைட்-ன்னு ஒரு யூனிட்டை படிக்கிறப்ப புரியற மாதிரியே இருக்கும். ஆனா, அரை மணி நேரம் கழிச்சு அடுத்த யூனிட் படிக்கிற போது மொத யூனிட் மறந்துடும்.




செமஸ்டர் எக்ஸாமுக்கு முன்னாடி நாள் R.S. Kruhmi -ஐ வைச்சிட்டு இப்படியும் அப்படியும் பொரட்டிட்டு இருந்தேன். நம்ம (வைக்கோ என்றும், சைக்கோ என்றும் நேரத்துக்கும், மூடுக்கும் தகுந்தாப்டி அன்போடு அழைக்கப்படும்) கோபால்சாமி வந்தான். 'என்னா மச்சி, சப்ஜெக்ட் எப்படி போகுது?'-ன்னான். நானோ ஒரு கருமமும் புரியாம செம கடுப்புல உட்கார்ந்துட்டு இருந்தனா..?, 'கப்பு கன்ஃபார்ம்-டா மச்சான்'-ன்னேன்.




அவன் முகத்துல ஒரு இனம் புரியாத நிம்மதி. 'அப்பாடி அரியர் எக்ஸாமுக்கு படிக்க ஆள் தேத்தியாச்சு'-ன்னு நினைச்சிருப்பான் போல, பயபுள்ளை. அடுத்த நாள் காலைல திரும்பவும் வந்து 'என்னாடா, கப்புதானே?-ன்னு' கேட்டு உறுதி படுத்திகிட்டான். பரிட்சையும் முடிஞ்சது, 1 மாசம் கழிச்சு ரிசல்ட்டும் வந்தது. பாத்தா... அவன் நம்பர் வரலை. ஆனா நான் பாஸாகிட்டேன்.கோபால்சாமி கடுப்பாயிட்டான்.


நாம சைக்கிள் ஓட்டிட்டு போனா, சனியன் சைக்கிள் பார்லயே உட்கார்ந்துட்டு வரும். நம்ம ராசி அப்படி. பார்ல உட்கார்ந்த சனியன் வேலை காட்டாம விடுமா? காட்டுச்சே! மார்க் லிஸ்ட் வாங்கிட்டு வரும்போதுதானா கோபால்சாமி எதிர்ல வரனும்? வந்ததும், 'மார்க்லிஸ்டை குடு மச்சி, நீ தான் 'ஆல்பாஸா'ச்சே-ன்னு கையிலிருந்ததை ஏறக்குறைய பிடுங்கிட்டான் (அவன் கடுப்பு அவனுக்கு). பிடுங்கி ஒவ்வொரு சப்ஜெட்டா பார்த்துட்டு வந்தவன் மெட்டலர்ஜி மார்க்கை பாத்ததும் பயங்கர காண்டாயிட்டான். சத்தியமாச் சொல்லுறேன், நானே அப்போதான் அந்த சப்ஜெக்ட்ல எவ்வளோ மார்க்குன்னு பார்த்தேன். பாத்தா... 71 மார்க்கு. என் கண்ணையே நம்ப முடியலை.
அடுத்த நாள்ள இருந்து, பாத்ரூம், மெஸ்ஸு, ஆ.எஸ்-ன்னு எங்க பார்த்தாலும் 'உன்னை நம்பி மோசம் போய்ட்டேன்'-ன்னு நல்லா கழுவி கழுவி ஊத்துவான். இவன் தொல்லை தாங்க முடியாம,
"நான் எம்-4 எக்ஸாமுல பாஸாகலைன்னாலும் பரவால்லை சாமி. இவனை மட்டும் மெட்டலர்ஜில பாஸ் பண்ணி விட்டுடு"-ன்னு முக்குறுனி வினாயகர் கிட்ட வேண்டிகிட்டு, தில்லை காளி கோவில்ல ராகுகால பூஜை மூணு வாரம் தொடர்ந்து அட்டன்ட் பண்ணுனேன். அப்படின்னா என்னா டார்ச்சர் குடுத்திருப்பன்னு பாத்துக்கோங்க.

Labels: , ,

Friday, August 22, 2008

பிரண்ஷிப்பு

காலேஜில ஆடாத ஆட்டமில்ல,
அடிக்காத லூட்டியில்ல.
எல்லாஞ் சேர்ந்து பாக்காத படமுமில்ல,
பேசாத பேச்சுமில்ல.

சொந்தத்த மறந்தாலும், திங்கிற
சோத்த மறந்தாலும்
மறக்க முடியாத ஷிப்பு
எங்களோட பிரண்ஷிப்பு.

அதெல்லாம் அப்போ.
ஆனா இப்போ...

ஏழு மணிக்காச்சும் எழுந்தாத்தான்
MRT பிடிக்க வழியுண்டு.

அக்கம் பக்கம் பேச்சில்ல
ஆழமாய் இழுத்து விட மூச்சில்ல.

அரக்க பரக்க போனா அரை மணி. அதுவரை
கூடையில் அடைபட்ட தக்காளி.

இருக்கவே இருக்கு MP3
இல்லாட்டி போனா PSP

வாழ்க்கை போகுது டைட்ஷிப்பா,
இதுல எங்க பிரண்ஷிப்பு?

ஆபீஸ்ல நுழைஞ்சா அது வேற உலகம்.

வந்த மெயிலுக்கு பதிலனுப்பி,
வராத ப்ராஜக்டுக்கு Quote அனுப்பி,

குனிஞ்சா நிமிர நேரமில்ல
செஞ்சா முடியிற வேலையில்ல.

15 நிமிஷம் டீ குடிக்க போனா
முறைச்சிட்டு நிப்பான் மேனேஜர்,
அவனே என் அப்ரைசலுக்கு டேமேஜர்.

ஆனாலும் நடுநடுவே Orkut-ம்
அப்போ இப்போ G-Talk-ம்
பாக்க நேரம் இருந்திருக்கு
'ஹாய்டா மச்சான்' னு சொல்ல முடிஞ்சிருக்கு.

இப்படி ஆகி போச்சு
என் பிரண்ஷிப்பு.

Labels: , , ,

Wednesday, July 30, 2008

The first camp

It started all of a sudden. I was in my short trip to India. Met Balaji after almost 1.5 years. He never changed except the not so bad looking cheeks. He was looking the same thin, agile and as swift as a humming bird. Well, a old humming bird ;-)
This was the conversation we had.
"Hay Ashok, we talk about camping in wild many times and this is the time to do it, I have a friend in Hogenakkal who can arrange a trek and camp"
"But Balaji, I am in a short trip and i don't have time to do all these things"
"Hay, This is what we do all the time - Procrastination. If not now, then it will be never" Said Balaji.
I was contemplating the idea. Yes, Balaji was right. If not now, it will be never. So i decided to bet 2 days of my time on this event.
The plan was up. Actually it was very vague - Go to hogenakkal- Camp in the forest for a night - go for a trek - catch fish - cook it and eat it - come back.
Balaji has an acquaintance in Hogenakkal, who will take care of the things. And the days are finalized. Go on Tuesday afternoon, spend the night in wilderness and come back on Wednesday evening. That’s it!
Frankly telling, I was thinking that this idea will never materialize until I am off to Hogenakkal.
It was nice Tuesday morning in July. Sky was lil' gloomy. I was woke up by the ringing of the mobile. Obviously it was Balaji - Barking at the other end. "Wake up, its time to hit the road". It was apparent that this guy was on the plan and there is no escape. Reluctantly i pulled myself up from the bed.
It was afternoon when we hit the road. Balaji packed shit load of things. God only know wat was in his back bag. All i looked for is the tent and it was there.
We picked up some Bananas to feed the monkeys on the way. Siddesh also joined with us. We had our lunch at Pennakaram. It is like 10 kilometers to Hogenakkal and the ghat section started. The scene was spectacular. The mountain range was covered with green trees unlike the same season of past years. Thanks to unusual summer showers.
The 3 men team
It was 3 pm when we reached Hogenakkal. Our boatman 'Subbu' was waiting for us. We started to buy things like groceries, water bottle, chicken etc.; Subbu arranged a vehicle to take us to the place. The sky was dark. The journey was very rough. I guess the road was paved centuries ago. To my surprise, Subbu told that there are busses to Bangalore on that route. On our way, many a people warned us that there is a pack of wild elephants up there. It was kind of thrilling and frightening.
Once we reach the destination, the mini lorry left us in a hurry and sped away. We were on our own, with all the things, the boat and just 4 people in the wilderness. Then the rain started. It wasn't the heavy one. But, didn’t allow us to continue our journey. We used the Boat as a shelter. After 30 minutes the rain subsided and we were set to the island in the middle of the river. I did not have the sense of time when we reached the island. It must be around 7 pm. The task in front of us was huge. We need to find the wood for the camp fire. Set up the tent and cook the food.
With the help of a small hand torch we started our search of 'dried' wood after the sudden downpour :-). Subbu managed to find a huge trunk of a flood washed tree. It would have taken me days to cut down that trunk. But, thanks to Subbu's stamina and experience. He managed to cut it down in to manageable pieces while we are searching for fire wood.
Subbu as a experienced man set the stove up using 3 stones and prepared to cook rice. Balaji, Siddesh and I were trying to set the campfire. Then the things happened so fast, like preparing chicken for barbeque, making tomato curry etc., in the midst of making tomato curry the rain started again made us to hide in the tent. It was good 30 minutes before it almost set the campfire off. Once the rain subsided we continued to barbeque the chicken. It was 11 pm when we are ready to feast on our dinner. Half wet with sweat and rain we plunged in to the river to wash all the dirt. Came out fresh and clean for the dinner.
The dinner was awesome. I attribute that to the water we used - for cooking. With all the jokes, giggles, letting the things pour out from heart, we slept around 1.00 am in morning. It was the first time for all of us sleeping in the wilderness. We decided to wakeup once every hour to put the woods in camp fire. It was a nice night hearing all the sounds of nature with all the senses are alert.
It was 6.00 am while we woke up. Cleaned the plastic rubbish what was left by people camped over there, dumped in one place (too bad, we had too much of luggage to bring all those rubbish and dump in the garbage bin).
Listening to the sounds of morning
Gathering things

Have you ever swam in river like this...?

Then we are set the boat to the falls down the stream. On the way we tried swimming across the river, rowing the boat etc., while we reached the falls it was around 12.00 noon. We took nice bath in the falls, and headed back to home.

Labels: , , ,

Wednesday, June 25, 2008

Brain of human and a dog- FT advertisement

I was reading the Fortune magazine lately (Dated 9th June'08) and I was intrigued by a full page advertisement in page 39.This add is for the financial times (FT) week end news paper.
This is how it looks.


What do you understand from this?

Well, this is what I understand.

Three brains represent a man, women and a dog. Wife asking her husband to walk the dog, and the husband says he will do so once he finish reading the news paper.
If you interpreted it in the same way as I did, congratulate yourself for being a human being :-)
Now enough of admiring yourself for being human. Take a second look at the image. Can you see something different?
Yes, the man's brain is stimulated because of reading the FT week end. That’s fine. But, can you see anything else?

Ok, take a look on the brain images of the women and dog. The dogs brain is just same as the woman’s. But, small in size.

This arises a whole bunch of questions.

Let me wear the hat of feminist.

How dare they can say that the brain of a dog and woman are the same? Such a famous news paper company, how dare they can place such a lame advertisement, which leads us to intemperate that, the woman and dog has same kind of brain but different sizes.

If they try to get away by saying that, the un-stimulated brains are that of dog and the man. Here is the question I have. How can a human being and dog can have the brain of same shape? :-)

I agree it is a very good advertisement. But, who ever the advertisement agency is, they should have thought about it. I think, the average reader of Fortune is more than intelligent to find out this glitch.

I think, it just proves how lame the advertising department of FT is?

Labels: ,

Saturday, December 15, 2007

Is google down?

This morning I got this weired message while surfing.



Is Google hacked?!




Labels: